×

கடந்த 25 ஆண்டுகளாகத் ஏமாற்றமடைந்த மக்கள் மத்தியில் மகிழ்ச்சி: காற்று மாசு குறைவால் கண்ணாடி போல் காட்சியளிக்கும் இமயமலை

ஜலந்தர்: இந்தியாவில், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறிய நன்மைகளும் நடந்துள்ளன. மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் இயற்கை புத்துயிர் பெற்றுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் நீர்நிலைகள் தூய்மையாகியுள்ளன, வீட்டில் இருக்கும் மக்களின் திறமை, ஆற்றல் வெளியில் வந்துள்ளது. ஒலி மாசு முற்றிலும் குறைந்துள்ளது. இவை அனைத்தையும் விடக் குறிப்பாகக் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து காற்று மாசுபாடு குறைந்துள்ளது. காற்று மாசால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் அனைத்திலும் தற்போது காற்று மாசு எதிர்பாராத அளவு குறைந்துள்ளது.

இதே நிலை பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியிலும் நிலவுவதால் அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். காற்று மாசு குறைந்தது மட்டும் அப்பகுதி மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணமில்லை இதனால் இமயமலையின் எழில்மிகு தோற்றம் தங்கள் வீட்டு மாடிகளிலிருந்தே தெரிவதால் மக்கள் மிகுந்த சந்தோசமடைந்து மலைத்தொடரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ரம்மியமான இமயமலையை எப்போது பார்த்தாலும் அழகுதான். ஆனால், ஜலந்தர் பகுதியில் சர்வ சாதாரணமாகத் தெரியும் இந்த அழகு கடந்த 25 ஆண்டுகளாகத் தெரியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதிகப்படியான காற்று மாசே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கால் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளதால் மீண்டும் இமயமலையின் அழகை ரசிக்கத்தொடங்கியுள்ளனர் அப்பகுதி மக்கள். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.



Tags : Himalayas , Happiness among the people who have been disappointed for the past 25 years: the Himalayas, which look like mirror of air pollution
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்