×

ஊரடங்கை மதிக்காத மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிடும் அரசு

கொரோனா பீதியால் பல உலக நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றன. ஆனாலும், எந்த நாட்டு மக்களாலும் வீடுகளில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. நம்மூர் போலத்தான் பலரும் சாலைகளில், உணவகங்களில், கடற்கரைகளில் சுற்றித்திரிந்து வைரசை பரப்புகின்றனர்.  இதனால், பல நாடுகளில் அந்தந்த அரசுகள் கடும் கோபம் அடைந்துள்ளன. பல்வேறு நாடுகளின் எச்சரிக்கை, மிரட்டல் வருமாறு:
* கோபத்தின் உச்சிக்கு சென்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்ட், ‘‘அரசு உத்தரவை மதிக்காமல், சாலையில் சுற்றித்திரிந்து உங்கள் உயிருக்கு ஆபத்தை தேடித் தருபவர்களை சுட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு கருணை காட்ட நான் இருக்கிறேன்,’’ என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
* துனிசியாவில் மக்கள் சாலையில் நடமாடுவதை கண்காணிக்க ரோபோக்களை களமிறக்கி உள்ளனர். அவைகள் சாலையில் யாரேனும் வந்தால் சைரன் ஒலி எழுப்பி எச்சரிக்கும். சம்மந்தப்பட்ட நபர், அத்தியவாசிய தேவைக்காக செல்கிறாரா என்பது குறித்து உரிய ஆவணம் காட்டினால் செல்ல விடும்.
* அமெரிக்காவின் லூயிஸ்வில்லி மாகாணத்தில் நோய் தொற்றுள்ள நபர் 14 நாள் தனிமையில் இருக்காமல் அடிக்கடி வீட்டை விட்டு வந்ததால், பாலியல் குற்றவாளிகளை கணுக்காலில் மட்டும் பூட்டு போன்ற கருவியை பொருத்தி போலீசார் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஊரடங்கு நேரத்திலும் மக்கள் காபி ஷாப், பீச்சில் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். சமூக இடைவெளியையும் யாரும் பின்பற்றுவதில்லை. அங்குள்ள போலீசாருக்கு, பொதுமக்களிடம் அறிவுறுத்தி வாய் வலித்ததுதான் மிச்சம். யாருக்கும் தங்களின் சந்தோஷத்தை விட்டுத்தர மனமில்லை.

Tags : government ,firing , Curfew, Corona, President of the Philippines
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்