×

போலீசார் அணிவதற்காக திகார் சிறைக்கைதிகள் 75,000 மாஸ்க் தயாரிப்பு

டெல்லியில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார் பயன்படுத்துவதற்காக திகார்,  மண்டோலி சிறையில் முகக் கவசம் மற்றும் சானிடைசர் தயாரிப்பு நடைபெறுகிறது. கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பணியில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி சந்திப் கோயல் கூறுகையில், ‘‘போலீசார், சிறைக் காவலர்களின் சொந்த பயன்பாட்டுக்காக இதுவரை 75 ஆயிரம் முகக்கவசம், 750 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போக்குவரத்து போலீசாருக்கு கடந்த வாரம் 3,000 முகக்கவசம் வழங்கினோம். தினமும் 1500 முதல் 2000 வரையிலான முகக்கவசம் தயாரிக்கப்படுகிறது. இவை டெல்லி நீதிமன்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் வழங்கப்படுகிறது,’’ என்றனர்.



Tags : Tiger Prisoners , Police, Tihar Jail, kkaitikal, Mask
× RELATED வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா