×

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை, எளிய குடும்பங்களில் உள்ள குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் இவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த மற்றும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த மாணவர் சேர்க்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மே மாத இறுதியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. அதனால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சேர்க்கை தேதி குறித்த விவரங்கள், அட்டவணைகள் ஏப்ரல் 14ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.


Tags : schools , Private schools, reservation, students
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...