×

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி:  தனியார் பள்ளிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடமாடும் காய்கறி கடையை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த ேபட்டி:  ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 90 சதவிகிதம் தயார் நிலையில் உள்ளது. தனியார் பள்ளிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, மாணவர்களிடம் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்வது தெரியவந்தால் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. முதல்வரின் அறிவுரைப்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடமாடும் காய்கறி கடை துவங்கப்பட்டுள்ளது. மேலும் பெல் நிறுவனத்தின் உதவியுடன் ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணி ஈரோடு மற்றும் கோபி பகுதியில் (நேற்று) இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.  கோபியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையான பொருட்கள், அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகைக்கடன் கட்டாய வசூல் குறித்து புகார் வந்தால், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Tags : Senkotayan , Curfew, tuition fees, Minister Sengottaiyan
× RELATED தனியார் பள்ளிகள் ஆன்லைனில்...