×

கொரோனாவால் சீண்ட ஆள் இல்லை; செடியிலேயே கருகும் மல்லிகை: விவசாயிகள் அவதி

திருவள்ளூர்: கொரோனா ஊரடங்கால் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால் மல்லிகைப்பூ விற்பனை தடைபட்டுள்ளது. இதனால் செடியிலேயே கருகுகிறது. விவசாயிகள் அவதியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மல்லிகை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. பொதுவாக உள்ளூர் சந்தைகளில் மல்லிகை கிலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும். விழா காலங்களில் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகும். அப்படி சந்தைகளில் வரவேற்பு பெற்ற மல்லிகையை கடந்த 2 வாரமாக சீண்ட ஆளில்லை.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள், கோயில் பூஜை தடைப்பட்டன. மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியதால் மல்லிகை பூக்களின் தேவை இல்லாமல் போனது. மல்லிகைப்பூ அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வராது என்று சொல்லி சந்தைகளுக்கு கொண்டு விற்கவும் போலீசார் அனுமதி மறுத்தனர். அதனால், பூக்களை மிகவும் குறைந்த விலையில் விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதில் பறிக்கும் கூலி கூட கிடைக்காததால், மாவட்டத்தில் உள்ள சிறு விவசாயிகள், தங்களது நிலத்தில் மல்லிகை பூக்களை பறிக்காமல் விட்டுள்ளனர்.

இவை செடிகளிலே கருகி கீழே உதிர்ந்து விழுகின்றன. மல்லிகைப்பூ வியாபாரம் மூலம் கிடைத்த வருமானத்தில் தினசரி குடும்ப செலவை கவனித்து வந்த சிறு விவசாயிகள், தற்போது வருமானம் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : Corona ,peasants ,plant , Corona, orchids growers
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...