×

ஒவ்வொரு தெருவிலும் விளக்குகள் எரியும் என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்வது அவசியம்: மத்திய மின்சாரத்துறை அமைச்சகம்

டெல்லி: நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும் போது தெருவிளக்குகளை அணைக்கக்கூடாது என மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும், இதேபோன்று செல்போன்களை ஒளிரவிட வேண்டும் என்பது தான் பிரதமரின் வேண்டுகோளாக இருந்தது. பிரதமரின் வேண்டுகோளை அடுத்து பல மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

மத்திய மின்துறை அமைச்சகம் விளக்கம்;
இந்நிலையில் மத்திய மின்துறை அமைச்சகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நாளைய தினம் வீட்டில் விளக்குகளை அணைக்கும் போது தெருவிளக்குகள் எரிய வேண்டும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரத்தில் வீட்டில் உள்ள இதர உபகரணங்கள் வழக்கம் போல் செயல்பட வேண்டும். மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சகம் விளக்கம்;
இதனிடையே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தளமும்; இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை.  மின்விளக்குகளை அணைக்கும் போது மின்கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்விளக்குகளை அணைக்கும் போது மற்ற மின் உபகரணங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய மின்சாரத்துறை அமைச்சகமும், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சகமும், அடுத்தடுத்து விளக்கங்களை வெளியிடுவதற்கு முக்கியமான காரணம் நாளை ஒரே நேரத்தில் இவ்வாறு வீட்டில் விளக்குகளை அணைப்பதால் மின் விநியோகம் அல்லது மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று மின்சாரத்துறை நிபுணர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் மத்திய மின்சாரத்துறை அமைச்சகமும், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சகமும், அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : street ,Ministry of Power and Energy ,government , Street Lighting, Local Authority, Ministry of Power and Energy
× RELATED வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.க்கு கொரோனா