×

வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணம் வூகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பரவுவது கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வரும் பட்சத்தில் அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் கைக்குட்டையாவது பாதுகாப்பு கவசமாக அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சமூக பரவல் ஆவதை தடுக்க மாஸ்க் அணிந்து ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. முகக்கவசங்களை அணிவதால் நோய் பரவலைத் தடுக்க முடியும். முடிந்தவரை வீட்டிலேயே உருவாக்கி முகக்கவசங்களை அணிவது நல்லது. கைக்குட்டை உள்ளிட்டவற்றையும் மாஸ்க்காக பொதுமக்கள் பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது.


Tags : house ,Government , Faceplate, central government
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்