×

பைக்கில் சுற்றிக்கொண்டு இருந்த இளைஞர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்ததால் தண்டனை ரத்து: இன்ஸ்பெக்டரின் செயலால் மருத்துவர்கள் பாராட்டு

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பைக்கில் சுற்றிக்கொண்டு இருந்த இளைஞர்கள் தாமாக முன்பு ரத்த தானம் செய்வதாக கூறியதால் இன்ஸ்பெக்டர் தண்டனை ரத்து செய்தார். வேலூர் அரசு மருவத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குவன் தலைமையில் எஸ்எஸ்ஐகள் வெங்கடேசன், சிவாஜி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, பைக்கில் இரு வாலிபர்கள் மின்னல் வேகத்தில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர். ஒரு மணி நேரம் நிற்க வைத்து அறிவுரை வழங்கினர். பின்னர் உள்ளூர் இன்ஸ்பெக்டரிடம் பைக்கையும், இரு வாலிபர்களை ஒப்படைக்க முடிவு செய்தனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் பணிபுரியும் ரத்த வங்கி ஊழியர் மற்றும் 3 பேர் வந்து ரத்தம் பற்றாக்குறையால் அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. யாராவது ரத்த தானம் செய்ய முன்வந்தால் சொல்லி அனுப்பி வையுங்கள் சென்று தெரிவித்தனர். இதனால் அந்த இரு வாலிபர்களிடம் ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளதா? என இன்ஸ்பெக்டர் இலக்குவன் கேட்டார். அதற்கு அந்த இளைஞர்களும் நாங்கள் ரத்தம் தானம் செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இவரும் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தனர். பின்னர் தனக்கு வழங்கப்பட்டு இருந்த தர்பூசணி, வெஜிடபிள் பிரியாணி போன்றவைகளை அந்த இருவருக்கும் இன்ஸ்பெக்டர் வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கான தண்டனை ரத்து செய்து பைக்கையும் இளைஞர்களிடம் கொடுத்தும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் அவசரக்காலத்தில் ரத்தம் தேவைப்பட்ட நேரத்தில் உதவி செய்ததற்காக இன்ஸ்பெக்டருக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



Tags : Doctors ,inspector ,men ,Cancellation , Cancellation , penalties , blood,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு