×

இந்தியாவில் காட்டுத்தீ போல பரவும் கொரோனா : 2,902 பேர் பாதிப்பு; 68 பேர் பலி; ஒரே நாளில் 601 பேருக்கு தொற்று

டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்திராவில் 423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் 411 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. மேலும் டெல்லியில் 386 பேரும்,கேரளாவில் 295 பேரும், ராஜஸ்தானில் 179 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 174 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ராஜஸ்தானின் பிகானெரில் 60 மூதாட்டி கொரோனாவால் பலியானார். 60 வயது மூதாட்டி இறந்தது ராஜஸ்தானில் கொரோனாவிற்கு முதல் பலியாகும். ராஜஸ்தானில் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. 191 பேரில் 41 பேர் டெல்லி ஜப்லீகீ ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டோர் ஆவர்

Tags : India , India, Corona, Ministry of Health, Delhi, Maharashtra
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...