×

காஞ்சிபுரம் தேரடி சுற்றுவட்டாரத்தில் நகராட்சியின் 9 வார்டுகள் முழுமையாக அடைப்பு: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. காஞ்சிபுரம் தேரடி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 9 வார்டுகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் வெளியே வரவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். பொதுமக்களுக்கு தேவையான பொருள்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.காந்தி சாலையில் உள்ள 19 வங்கிகளும் மூடப்படும். அதற்குப் பதிலாக 3 நடமாடும் ஏடிஎம் மெஷின் மூலம் பொதுமக்கள் பணம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : municipalities ,Kanchipuram Theradi ,neighborhood ,Kanchi ,circuit , 9 municipal wards, Kanchipuram Theradi circuit completely, Kanchi Collector Information
× RELATED பேரூராட்சி, நகராட்சி,...