×

இரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ஊரடங்கின்போது பிறந்த இரட்டையர்களுக்கு கோவிட், கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  கொரேனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி காலை உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து ராய்ப்பூரில் தங்கியுள்ள பிரீத்தி வர்மா என்ற 27 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களில் ஆண் குழந்தைக்கு `கோவிட்’ என்றும், பெண் குழந்தைக்கு `கொரோனா’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாய் பிரீத்தி வர்மா கூறுகையில், `‘கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த வாகன போக்குவரத்தும் இல்லாத நிலையில், அரசு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.

கடும் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வழியில் போலீசார் எங்கள் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதனால், மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்த நாளை நினைவு கூரும் வகையில் `கோவிட்’ `கொரோனா’ என பெயர் வைக்க என் கணவரும் நானும் முடிவு ெசய்தோம். இந்த வைரஸ் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், கைகழுவுதல், சுகாதாரம் போன்ற பல்வேறு நல்ல பழக்கங்களை உலகுக்கு கற்றுத் கொடுத்தால் இந்த பெயரை ேதர்வு செய்தோம்,’’ என்றார். தாயும் குழந்தைகளும் சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.


Tags : Corona ,children , Twin children, Covid, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...