×

மீன்பிடி தடைகாலம் குறைப்பா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை:  திருவல்லிக்கேணியில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:   தமிழகத்தில் உள்ள வங்கிகள் 3 மாதங்களுக்கு கடன் தவணையை வசூலிக்க கூடாது என ஏற்கனவே முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார். அவரது உத்தரவை மீறி கடன் தொகையை வசூலிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், மீனவர்களின் 60 நாள் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது. இதனால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என்பதால், மீன்பிடி தடை காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுபற்றி கடலோர மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி தான் முடிவெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூழ்நிலையில், மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Jayakumar ,Minister Jayakumar , Fisheries ban, Minister Jayakumar, Corona
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...