×

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 647 பேருக்கு கொரோனா: கடந்த 2 நாளில் கண்டுபிடிப்பு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்களிடம் கடந்த 2 நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 647 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறிப்பட்டுள்ளது. இவர்கள் அந்தமான், டெல்லி, அசாம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரகாண்ட் மற்றும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள். கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் 182 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 130 அரசு பரிசோதனை கூடங்கள். நேற்று முன்தினம் மட்டும் 8 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

360 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை: மத்திய உள்துறை இணை செயலாளர் நேற்ற அளித்த பேட்டியில், ‘‘டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 360 வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று விட்டனர். அவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் 960 பேர், இந்தியாவில் உள்ளனர். இவர்கள் தற்போது திருப்ப அனுப்பப்பட மாட்டாார்கள். சுகாதார விதிமுறைகள்படிதான் அவர்கள் அனுப்பப்படுவர்,’’ என்றார்.
மருந்து பற்றாக்குறை இல்லை: மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘கொரோனாவை எதிர்த்து போராட தேவையான அனைத்து அத்தியாவசிய மருத்துவ சப்ளைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில், 62 சிறிய ரக விமானங்களில் 15.4 டன் மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மருந்து பொருட்கள், மருத்துவமனை உபகரணங்கள் தயாரிப்பில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 200 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மருத்துவ சப்ளையை கண்காணிக்க மத்திய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

31 ஆயிரம் டாக்டர்கள் தாமாக முன்வந்து சேவை
கொரோனாவை எதிர்த்து போராடும் முயற்சியில் ஓய்வு பெற்ற அரசு, ராணுவ மருத்துவ சேவை மற்றும் தனியார் டாக்டர்கள் இணைய வேண்டும் என மத்திய அரசு கடந்த 25ம் தேதி வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று 31,062 டாக்டர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்னர் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : Delhi ,meeting ,Corona ,Discovery , Delhi Meeting, Corona
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு