×

விளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி

சென்னை: கோரானா பீதியால்  விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய முடியாமல் வீட்டிேலேயே முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடம் வைத்து இருக்கும் வசதியான வீரர்கள் கூட உடற்பயிற்சி மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் விளையாட்டு நுட்பங்களை மேம்படுத்திக் கொள்வது சிரமான விஷயமாக இருக்கிறது. அதிலும் இந்த இக்கட்டான சூழலில்  கிடைக்கும்  உணவுகளில் எதை சாப்பிடலாம், எடையை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பதில் பலருக்கும் சிக்கல் தொடர்கிறது. தொடர் ஓய்வு, கிடைக்கும் உணவை சாப்பிடுவதில் உள்ள சிக்கல்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் எப்படி தங்களை கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கு வழிகாட்ட இப்போது ஆன்லைன் பயிற்சி மையங்கள்  தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய வீரர்கள் பலருக்கும்  ஊட்டச்சத்து, உடற்பயிற்சி ஆலோசகராக இருந்த  ரேயன் பெர்னாண்டோ இப்போது ‘ஆன்லைன் பயிற்சி’யை தொடங்கி உள்ளார். முகநூலில் இந்திய வீரர்கள் உட்பட பலரும் இவரை பின் தொடர்கின்றனர். அவர்களுக்கு என்ன சாப்பிடலாம், என்ன பயற்சியை செய்தால் அதை உடலுக்கு உடமாக மாற்றலாம், எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை ஆன்லைனிலேயே தெரிவித்து வருகிறார். இதேபோல் பல்வேறு விளையாட்டுகளின் பயிற்சியாளர்கள் தன்னிடம் பயிற்சி பெறும் வீரர்களை கொண்ட ‘வாட்ஸ் ஆப்’ குழுக்களை ஆரம்பித்து தொடர்ந்து ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.

வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பல்வேறு வீரர்களுக்கு  இந்த ஆன்லைன் பயிற்சி புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல சமூக ஊடகங்கள் மூலம் வீரர்களும் தங்கள் சந்தேகங்களையும் உடனுக்கு உடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ‘சமூக விலகலை தொடர்ந்தாலும், பயிற்சியை விட்டு விலகாத சூழல் மீண்டும் ஏற்பட்டிருப்பது உற்சாகம் அளிப்பதாக வீரர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

புதிய நேரத்தில்  டபிள்யூடபிள்யூஈ:
குழந்தைகளை மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும்  விருப்பமான ரெஸ்லிங் விளையாட்டு நிகழ்ச்சியான ‘டபிள்யூடபிள்யூஈ பிளாக் பஸ்டர்ஸ்’ நிகழ்ச்சி இனி தினமும் 8 மணிக்கு சோனி டென் 1 மற்றும் சோனி டென் 3 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியில்  ஸ்டோன் கோல் ஸ்டீவ் ஆஸ்டின், ஷாவன் மிட்செல்ஸ், தி ராக், அண்டர்டேக்கர், ஹல்க் ஹோகன், டிரிபிள் எச் என பல்வேறு நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செவிலியரான வீராங்கனை:
கொரோனா பீதியில் உலகமே சிக்கித் தவிக்க, அதை சரிச் செய்ய உலகம் முழுவதும்.  விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிதி உதவி செய்து வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் கோல்கீப்பர்  ரேச்சல் லிஞ்ச்  நேரடியாக கொரோனா ஒழிப்பில் களம் காண உள்ளார். ஆம் தொழில்முறை செவிலியராக பதிவு செய்துள்ள ரேச்சல், ஒலிம்பிக் போட்டிக்கான தீவிர பயிற்சியில் இருந்தார். போட்டி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து மேற்கு ஆஸ்திரேலியா மாநில மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பிரிவில்  மீண்டும் செவிலியராக பணியாற்ற விண்ணப்பித்துள்ளார்.  இந்த இக்கட்டான நேரத்தில் கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதால் ரேச்சலும் விரைவில் பணியில் சேருவார் என்கிறார்கள்.

Tags : athletes , Corana, athletes, online training
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...