×

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ஆயுஷ் மருத்துவர்களை பயன்படுத்த முடிவு

சென்னை: கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 309 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, நேச்சுரோபதி மருத்துவர்களை இந்த தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணை இயக்குநர் டாக்டர். பார்த்திபன் மற்றும் மாநில மருந்து வழங்கும் அதிகாரி பிச்சையகுமார் ஆகிய 2 அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்கள் பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக ஆயுஷ்துறை செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். டிஜிஎச்எஸ் இந்த நடவடிக்கைளில் ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்களை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக மாவட்ட அளவில் ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆயுஷ் பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பு இன்று காலை 10 மணிக்கு டிசிஎச்எஸ் மூலம் பயிற்சி அளிக்கவுள்ளனர். எனவே இதற்கு விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.


Tags : doctors ,Ayush , Corona Infection, Ayush Doctors
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை