×

கொரோனா பாதிப்பால் பிலிப்பைன்ஸ் தூதர் பலி

பெய்ரூட்: கொரோனா வைரஸ் பாதிப்பால் லெபனானுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் பரிதாபமாக உயிரிழந்தார். லெபனானுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் பெர்னார்டிடா கேடல்லா (65), கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தூதர் பெர்னார்டிடா கேடல்லா, லெபனான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், லெபனான்,

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் பிலிப்பைன்ஸின் நலன்களைப் பாதுகாக்கவும் பாடுபட்டார் என்று, பெர்னார்டிடா கேடல்லாவை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் பாராட்டியது. பெய்ரூட்டில் அவர் நியமிக்கப்பட்டதற்கு முன், ‘பெர்னி’ என்று அழைக்கப்படும் கேடல்லா, 2014 முதல் 2017ம் ஆண்டு வரை 2,40,000 பிலிப்பைன்ஸ் மக்களை கொண்ட ஒரு நகரமான ஹாங்காங்கிற்கு தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ambassador ,Philippines ,victim ,Corona , Corona, Ambassador of the Philippines, Killed
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!