×

சீனாவின் கடை வீதிகளுக்குள் செல்ல கட்டுப்பாடு செல்போனில் ‘கிரீன் சிக்னல்’ இல்லையென்றால் ‘அவுட்’

பீஜிங்: கொரோனா பரவலை தடுக்க சீனாவின் தொழிற்சாலை, கடை வீதிகளில் செல்ல செல்போனில் ‘கிரீன் சிக்னல்’ இல்லையென்றால் அவர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ஓரளவு அடங்கிய நிலையில், வூஹான் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அங்குள்ள தொழிற்சாலைகளும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தும், கொரோனா பீதி அம்மக்களை விட்டு இன்னும் விலகாத நிலையில், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்பவர்களை சோதனை செய்ய வசதியாக செல்போனில் புதிய அறிவியல் முறையை பின்பற்றுகின்றனர்.

அதன்படி, பணியாளர் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் பச்சை நிற சின்னம் (பச்சை சமிக்ஞை) மூலம் வாழ்க்கை இயங்கத் தொடங்குகிறது. அதாவது, பச்சை அடையாளம் என்பது ஒரு ‘சுகாதார குறியீடு’ ஆகும். இது, சம்பந்தப்பட்ட நபர் நோய்த்தொற்று அறிகுறிகளிலிருந்து விடுபட்டுள்ளார் என்பதை கூறுகிறது. சுரங்கப்பாதை பணி, ஓட்டலுக்குள் செல்லுதல், வூஹானுக்குள் கடைவீதிகளுக்குள் நுழைய இந்த அடையாளம் அவசியம். சீனாவில் கிட்டத்தட்ட அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால், இந்த சுகாதார குறியீடு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் தரவுகளை முழுமையாக வைத்துள்ள சீன அரசு, மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, ஆடை உற்பத்தி நிறுவனத்தின் மேலாளரான வு ஷெங்காங், வூஹான் சுரங்கப்பாதை நிலையத்தில் தனது ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து, அங்குள்ள ஒரு சுவரொட்டியின் பார் குறியீட்டை தனது தொலைபேசியில் ஸ்கேன் செய்தார். இது, அவரது அடையாள எண் மற்றும் பச்சை அடையாளத்தை காட்டியது. அதன்பின் சுரங்கப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு பச்சை அடையாளம் காட்டப்படவில்லை என்றால், அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார். ‘டிஜிட்டல் தொடர்புத் தடமறிதல்’ என்ற அறிவியல் முறைப்படி, ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் அவரது தொடர்புகள் கண்டறியப்படுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : China ,shop streets , China, Shop Road, Control, Green Signal
× RELATED சொல்லிட்டாங்க…