×

ஊரடங்கால் பழநியில் மணமகள் வீட்டில் எளிமையாக நடந்த திருமணம்

பழநி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, பழநியில்  இஸ்லாமியர் இல்ல திருமணம் மணமகளின் வீட்டில் எளிமையான முறையில் நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் சமூக விலகலை கடைபிடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கூடாத வகையில் பல திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இஸ்லாமியர் இல்ல திருமண நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் நடந்துள்ளது. பழநியைச் சேர்ந்த மணமகளுக்கும், தேனியைச் சேர்ந்த மணமகனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பழநியில் உள்ள தனியார் திருமண மண்டபம் புக் செய்யப்பட்டிருந்தது. 144 தடை உத்தரவின் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் நேற்று மணமகள் இல்லத்தில் இத்திருமணம் எளிமையான முறையில் நடந்தது. மணமக்களின் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 15 பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இவர்களும் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த வேப்ப இலை, மஞ்சள் கலந்த தண்ணீரில் கை மற்றும் கால்களை கழுவி, முகக்கவசம் அணிந்த நிலையல் விழாவில் கலந்து கொண்டனர். கமகம பிரியாணி இல்லாமல் எளிமையான முறையில் நடந்த இஸ்லாமியர் இல்ல திருமண விழா அப்பகுதிமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.   


Tags : wedding ,home ,bride ,wedding home , Curfew, antique bride, married
× RELATED ஊரடங்கால் காலையில் இருந்து மாலை வரை...