×

புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை : சென்னையில் கொரோனா பாதித்த 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக காவல்துறை அறிவித்தது.புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவை போலீசார்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  ஆனாலும் சென்னையில் போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு இடையிலும் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுவது சாலைகளில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களை தடுப்பதற்காக அந்த நபர்களின் மீது வழக்குப்பதிவு பதிந்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்வதில் போலீசார் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். இதன் முதற்கட்டமாக சென்னை புதுப்பேட்டையில் அதிநவீன கேமரா மற்றும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா துவங்கி வைத்தார்.

இந்நிலையில் புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய 8 இடங்களில் மக்கள் நடமாட்டம் பரவலாக உள்ளது. கொரோனா அச்சம் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் மக்கள் நடமாடுவது பாதுகாப்பானது இல்லை என்பதால் கண் கொத்தி பாம்பாக இந்த பகுதிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.


Tags : places ,Velachery ,Saidapet ,Purasivakavu , Corona, Police, Puliyanthoppu, Ennore, Thondayarpet, Corporation, Instruction
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...