×

‘எங்க ஏரியா... உள்ள வராதே’ முட்செடிகள் போட்டு சாலைகள் அடைப்பு: தொண்டி அருகே பரபரப்பு

தொண்டி: தொண்டி, ஆண்டிபட்டி அருகே ஊரின் எல்லைப்பகுதி சாலையில் முட்செடிகளை வெட்டி போட்டு வெளியாட்களை உள்ளே விடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பெரும்பாலானோர் பின்பற்றாமல் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராம சாலையில் முட்செடிகளை வெட்டி போட்டு அடைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கு வெளியே செல்லும் வகையில் அமைத்துள்ளனர். இதனால் வெளியாட்கள் உள்ளே வருவது தவிர்க்கப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், ‘‘ஊரடங்கு உத்தரவின்போது அதிகளவில் ஆட்கள் இப்பகுதியில் வருகின்றனர். அனைவரும் வெளியூர் ஆட்களாக உள்ளனர். எங்கிருந்து வருகிறார்கள் என்பதே தெரியவில்லை. அவர்கள் மூலம் தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் சாலையை அடைத்துள்ளோம். ஆனால் அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்லும் வகையில் முள்ளை போட்டுள்ளோம்’’ என்றனர்.

3 கிமீ தூரம் அடைப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கண்டமலனூர் விலக்கில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ஆண்டிபட்டி அருகேயுள்ள திருமலாபுரம் கிராமத்தை குறுக்கு வழியாக பயன்படுத்தி சென்று வந்தனர். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் மருத்துவமனைக்கு இவ்வழியே செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதை கண்ட திருமலாபுரம் மக்கள் சுமார் 3 கிமீ தூரத்திற்கு ஊரின் இரு எல்லைகளிலும் முட்செடிகளை போட்டு வைத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் ஊர் வழியாக செல்லும் சாலையை தேனி ஜிஹெச் செல்ல குறுக்கு வழியாக பயன்படுத்துகின்றனர். இதனால் எங்களுக்கு கொரோனா தொற்று பரவும் என கருதி ஊர் எல்லைகளை முட்செடிகளை கொண்டு அடைத்து விட்டோம்’’ என்றனர்.

Tags : Area ,roads ,Sensation ,Thondi , 'thorns, roads, Thondi
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...