×

நான் இதற்கெல்லாம் தயங்கமாட்டேன்: ஊரடங்கு உத்தரவை மீறினால் சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவு

மணிலா : பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. அதன்படி, பிலிப்பைன்ஸில் 2,633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மெட்ரோ மணிலாவில் உணவு விநியோகம் முறையாக நடைபெறவில்லை என இடதுசாரி குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, நான் இதற்கெல்லாம் தயங்கமாட்டேன். ஊரடங்கு உத்தரவை மீறி போராடுபவர்களால் பிரச்சினை ஏற்பட்டாலோ சண்டையிட்டாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டாலோ அவர்களைச் சுட்டுக் கொல்லுங்கள். இதுதான் காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு என் உத்தரவு. புரிகிறதா?” எனக் கூறினார்.

இந்தப் பேச்சினால் சமூக வலைத்தளங்ளில் புதன்கிழமை இரவு முதல் டுடெர்டேவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி #OustDuterte என்ற ஹேஷ்டேக் கொண்ட பதிவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.ஏற்கனவே, அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சிலர் நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்டதாகவும் உச்சி வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டதாகும் சமூக வலைத்தளங்களில் படங்கள் பரவுகின்றன.

Tags : Philippine Chancellor ,Chancellor ,Philippine , President, Rodrigo Duterte, Curfew, Corona, Virus, Philippines
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...