×

இது எங்க ஏரியா; கொரோனாவை மிரட்டும் வியாட்நாம்: 10 கோடி மக்கள் தொகையில் 200-ஐ தாண்டாத பாதிப்பு; ஒருவர் கூட உயிரிழக்கவில்லை

ஹனோய்: 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி  கண்டறியப்பட்டது. தற்போது 205க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,166 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் 1,014,499 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,12,018 பேர் குணமடைந்தனர்.

இந்த நிலையில் 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் இறக்கவில்லை. கொரோனா பரவ தொடங்கியதும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவருக்கும் முறையாக பரிசோதனை  நடத்தப்பட்டது. கொரோனா அறிகுறி இருந்தவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பழைய ராணுவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பியா நாடுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து வந்த 45,000திற்கும் மேற்பட்ட மக்களை தனிமைப்படுத்தினர். வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு முழுவதும் தடை விதித்து  உத்தரவிட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் வேகமாக செயல்பட்டு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது எப்படி ,யாரையெல்லாம் சந்தித்தார்கள் என தெரிந்து கொண்டு அவர்களையும் தனிமைப்படுத்தினர்.
ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் வியட்நாம் வரையறுக்கப்பட்ட வசதிகள் மட்டுமே கொண்ட நாடு. வியட்நாமின் சீறிய முயற்சியால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200கூட தாண்டவில்லை. 96 மில்லியன் மக்கள் தொகை  கொண்ட நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

தென்கொரியாவை போல் மக்களை பரிசோதித்து முடிவுகளை உடனுக்கு உடன் முடிவுகளை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. வியட்நாமில் ஒற்றை கட்சி ஆட்சி நடப்பதால், அங்கு வலுவான கண்காணிப்பு உட்கட்டமைப்பு  உள்ளது. இதனால் கடுமையான, தீர்க்கமான நடவடிக்கைகளை எளிதாக செயல்படுத்த முடிந்தது. 2003ல் சீனாவில் சார்ஸ் வைரஸ் முதலில் பரவிய நாடு வியட்நாம் தான், அதற்கு அந்த நாடு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது.  அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது வேகமாக செயல்பட்டு உலகை உலுக்கும் கொரோனாவை எளிதாக வியட்நாம் கட்டுப்படுத்தியுள்ளது.


Tags : area ,Vietnam ,Corona ,population , Where is this area? Vietnam threatens Corona: impact not exceeding 200 out of 100 million population; Not one person died
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி