விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2020ம் ஆண்டுக்கான விருதுகள்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2020ம் ஆண்டுக்கான விருதுகள் அம்பேத்கர் சுடர் விருது, காமராசர் கதிர் விருதுகளை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சாதி ஒழிப்பு என்னும் கருத்தியலை ஏற்று செயல்பட்டு வரும் ஆளுமைகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சுடர் விருது இந்த ஆண்டு தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு வழங்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அய்லய்யா,  பௌத்தம் குறித்து ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றவர். மகாத்மா ஜோதிராவ் புலே விருதைப் பெற்றவர். இது தவிர விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சான்றோர்களின் விவரம் வருமாறு பெரியார் ஒளி பேராசிரியர் அருணன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, காமராசர் கதிர் கே.எஸ். அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, செம்மொழி ஞாயிறு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிந்துவெளி ஆய்வாளர், அயோத்திதாசர் ஆதவன் பாலசுந்தரம் (மறைவு), நிறுவனர், அம்பேத்கர் மக்கள் இயக்கம் (மறைவுக்குப் பின்னர் வழங்கப்படும் மரபின்படி), காயிதே மில்லத் பிறை உமர் பரூக் (மறைவு) நிறுவனர், நீலப் புலிகள் இயக்கம் ( மறைவுக்குப் பின் வழங்கப்படும் மரபின்படி) இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா  ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும் பாராட்டுப் பட்டயமும்  கொண்டவையாகும்.

Related Stories:

>