×

அம்மான்னா சும்மா இல்லேடா... அவ இல்லைனா யாரும் இல்லேடா...உங்களை இதுவரை கொரோனா நெருங்காததற்கு தாயே காரணம்

சின்னப்பிள்ளையில் ஊசி என்றால், எத்தனைப் பேர் அழுதிருப்போம். காய்ச்சல் என்றால் ஊசி வரும் என்று தெரிந்ததும், சித்தி, சித்தப்பா, மாமா வீடுகளுக்கு என்று தப்பித்து சென்ற கதைகள் ஏராளம். ஆனால், நம்முடைய அம்மாக்கள் கட்டி அணைத்து சென்றும், இழுத்து பிடித்து சென்றும் சின்னப் பிள்ளைகளில் போட்ட தடுப்பூசிகள்தான் இன்று நம்மை பெரிய அளவில் கொரோனா தாக்கத்தில் இருந்து தடுத்து வருகின்றன என்ற ஆச்சரியமான உண்மை மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பிறந்த கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் தன் ஆட்டத்தையும், கொட்டத்தையும் பெரிய அளவில் காண்பித்து வருகிறது.

வல்லரசான அமெரிக்காவும், வளர்ந்த நாடுகளான ஐரோப்பாவும் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் 4,000 பேர் வரை இறந்து விட்டனர். அடுத்ததாக இத்தாலியில் 12,000 பேர் வரை பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாட்டு சாலைகளில் நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்களை விட இறந்தவர்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் அதிகமாகி உள்ளன. தெற்கு ஆசியாவிலும் பல நாடுகள் கொரோனாவின் தாக்கத்தினால் விழி பிதுங்கி நிற்க ஆரம்பித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இறப்பும் சரி, பாதிப்புகளும் சரி பெரியளவில் இல்லை.

இங்கு வைரஸ் பாதிப்பு உள்ளவர்களில் கூட பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற வந்த பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள சக்திதான் என்று கூறப்படுவது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் குழந்தைப் பருவத்தில் இருந்தே பல தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இதில் ஒன்றுதான் ‘தி பாசிலஸ் கால்மெட்குயரின்’ எனப்படும் பிசிஜி தடுப்பூசி. உலகளவில் டிபி எனப்படும் காசநோய் பரவி, லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், அதில் இருந்து காப்பாற்றுவதற்காக இந்தியாவில் பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டது. இன்றுள்ள நடுத்தர, வயதான மக்களின் தோள்பட்டைக்கு கீழே கைகளில் உள்ள தழும்பே இதற்கு சாட்சி.

இந்தியாவில் காசநோய் வராமல் தடுப்பதற்காக ேதசிய கொள்கையாக, பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இன்றைக்கும் பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது. இது சளி பிடிப்பதை தடுக்கும் ஒருவகை தடுப்பூசி. தற்போது இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்று அமெரிக்காவின்  நியூயார்க் தொழில்நுட்ப மையத்தின் உயிர் மருத்துவ அறிவியல் உதவி பேராசிரியர் கோன்சலோ ஒட்டாசு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு இவர்கள் மேற்கோள் காட்டுவது, ‘பிசிஜி தடுப்பூசி போடுவதை தேசியக் கொள்கையாக கொண்ட நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு குறைவாக உள்ளது.

ஆனால், இதை குழந்தைகளுக்கு போடாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது,’ என்பதுதான்.
அதாவது, ெகாரோனா வைரசின் முக்கிய நடவடிக்கைகள், நுரையீரலில் சளியை ஏற்படுத்தி, மூச்சுவிடுவதை சிரமமாக்குவதுதான். அதே சமயம், பிசிஜி தடுப்பூசியின் முக்கிய நடவடிக்கை, நுரையீரலில் பெரிய அளவில் சளி ஏற்படுவதை தடுப்பதுதான். இப்போது தெரிகிறதா, கொரோனாவின் ஜம்பம், ஏன் இந்தியாவில் பலிக்கவில்லை என்று என்கின்றனர் இவர்கள். ஆனால், தங்கள் ஆராய்ச்சி இன்னமும் முழுமை அடையவில்லை என்றும், தீவிரமாக அதுபற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறோம் என்றும், அதனால், இப்போதைக்கு பிசிஜி.யை கொரோனாவுக்கான தடுப்பூசியாக பயன்படுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய ஆய்வு முடிவுகளால், அமெரிக்காவும், இத்தாலியும், உலகளாவிய பிசிஜி தடுப்பூசி கொள்கையை தங்கள் நாட்டிலும் தேசியக் கொள்கையாக அறிவிக்கலாமா என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற ஆய்வுகள் அவ்வப்போதைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் உருவாகும் வார்த்தைகளாக இருப்பவை என்றும், முழுமையாக ஆராய்ச்சியின் இறுதியில்தான் எந்தவொரு முடிவுக்கும் வர முடியும் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ... குழந்தைப் பருவத்தில், அழுதாலும் பரவாயில்லை, காய்ச்சல் வந்தாலும் பரவாயில்லை... என் மகன் பிற்காலத்தில் நன்றாக இருப்பான் என்று நினைத்து நமக்கு கட்டாயப்படுத்தி தாய்மார்கள் போட வைத்த ஒரு தடுப்பூசி, இன்றைக்கு இந்தியா முழுவதும் கொரோனாவை ஓரளவுக்கேனும் விரட்டுகிறது என்ற செய்தி, நம் அன்னையர்கள் அனைவருக்கும் சல்யூட் அடிக்கும் ஒரு செய்தியாகும்.

அப்பவே நாம கெத்து...
* இந்தியாவில் பிசிஜி தடுப்பூசி போடும் பணி 1948ல் இருந்து தொடங்கப்பட்டது. குழந்தைகள் பிறந்த 4 நாளில் பிரத்யேக ஊசி மூலம் இந்த தடுப்பூசி போடப்படும். இதனால் இடதுகையில் வளர்ந்த பிறகு சிறிய அளவிலான தழும்பு ஏற்படும்.
* காசநோய்த் தடுப்பூசி அல்லது பி.சி.ஜி தடுப்பூசி என்பது கால்நடைக் காசநோய்க் கிருமியிலிருந்து உண்டாக்கப்பட்ட உயிருள்ள மற்றும் வலிமை குறைந்த பாக்டீரியங்களைக் கொண்ட தடுப்பூசி.
* இந்த தடுப்பூசியின் வீரியம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், 80 சதவீதம் அளவுக்கு காசநோய், நீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* கடுமையான பக்க விளைவுகள் ஏதும் இதனால் ஏற்படாது.
* ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னர் முதல் முறையாக உலகத்தில் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்திய நாடுகள் என்ற பெருமை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உண்டு.

Tags : Momna ,Nobody ,Anyone ,Amma She , Mother, Corona, Corona Virus, USA
× RELATED ‘யாரும் அச்சப்பட வேண்டாம்’ பெண்கள்...