×

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அடுத்த வாரம் ஆலோசனை

கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 42 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், இப்பிரச்னை பற்றி 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதுவரை கூடி விவாதிக்கவில்லை. கடந்த மாதம் வரை இதன் தலைவராக சீனாவை சேர்ந்த ஜங் ஜூன் இருந்தார்.  சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததாலும், கொரோனா வைரஸ் பரவியதை சீனா மறைத்து விட்டதாகவும் உலக நாடுகள் குற்றம்சாட்டி வந்ததாலும், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டாமல் அவர் தவிர்த்து வந்தார்.   தற்போது, டொமினிக் குடியரசை சேர்ந்த ஜோஷ் சிங்கர், இந்த கவுன்சிலின் தலைவராக இருக்கிறார்.

இவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதால், அது பற்றி விவாதிப்பதற்காக அடுத்த வாரம் அல்லது அதற்கு முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டு உள்ளேன்,’’ என்றார்.

Tags : UN ,Security Council , UN Security Council, Corona
× RELATED சர்வதேச அரங்கில் இந்தியா மிகவும்...