×

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய தாமாக முன்வர வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோயானது நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் டெல்லியில் நடந்த ஜமாத் மாநாட்டிற்கு சென்றவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. இந்த சூழலில் மாநாட்டிற்கு சென்றவர்களில் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம். அந்த மாநாட்டில் பங்கேற்ற பலர் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்ற தகவலும் வருகிறது. எனவே, டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

பரிசோதனை செய்தால்தான் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். எனவே, டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களில் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க, கொரோனாவை ஒழிக்க இந்தியாவில் உள்ள அனைவரும் முழு மூச்சாக செயல்பட்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : conference ,examination ,Delhi ,GK Vasan , Delhi Conference, Coronavirus, Medical Testing, GK Vasan
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை