×

வாணியம்பாடியில் கொரோனா பாதிப்பு குறித்து கணக்கெடுப்புக்கு சென்ற அலுவலர்களை சிறைபிடிப்பு: வாலிபர் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 8 பேரை தனிமைப்படுத்தி, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உள்ளதா? என வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நேற்று முன்தினம் கணக்கெடுக்க சென்ற அலுவலர்களை, அங்குள்ள சிலர் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.

மேலும், அடையாள அட்டை மற்றும் கணக்கெடுப்பு புத்தகத்தை கிழித்து எரிந்தனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அலுவலர்களையும் அவர்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அதிகாரிகள் வாணியம்பாடி டவுன் போலீசார் அல்டாப்(25) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


Tags : men ,Vaniyambadi ,Corona , Vaniyambadi, Corona, Officers Captured, Arrested
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...