×

பைக்குகளில் லாங் டிரைவ் செல்ல முயற்சி: வெளியூர் போக பொய் சொல்லி பாஸ் வாங்க முடியாது: விசாரணையில் சிக்கி விழிபிதுங்கும் விண்ணப்பதாரர்கள்

சென்னை:  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அவசர தேவைக்காக வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்ல அனுமதி வழங்கும் வசதியை காவல்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தை பொதுமக்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அவசிய தேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் மூலம் வெளியூர் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. சென்னையில் பாஸ் பெற விண்ணப்பிப்பவர்கள் ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை அணுக வேண்டும்.

 சென்னை மற்றும் இதர மாநகராட்சி பகுதிக்குள்ளாகவே ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல மண்டல அதிகாரி பாஸ் வழங்குவார். மாவட்டத்துக்கு உள்ளாகவே பயணிப்போருக்கு தாசில்தார் மூலமாக பாஸ் வழங்கப்படுகிறது. சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் எங்கிருந்து பயணத்தை தொடங்குகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாஸ் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.   இப்படி செல்பவர்களுக்கு, திருமணம், துக்க நிகழ்ச்சி, உடல் நலம் பாதிப்பு ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது.  எப்படியும் பாஸ் வாங்கி விடலாம் என்ற அவர்களுடைய மூவ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்து வருகிறது.

அந்த அளவுக்கு பொய் சொல்லி பாஸ் வாங்க முயற்சிக்கும் அவர்களின் நடவடிக்கைதான் காரணம். இதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால், துக்க நிகழ்ச்சி என்றால் எந்த இடத்தில் யார் இறந்திருக்கிறார், அவர் விண்ணப்பிப்பவருக்கு ரத்த உறவா என்பதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் உறுதி செய்து விடுகின்றனர். பின்னர் எப்படி ஏமாற்ற முடியும். திருமண நிகழ்ச்சிகளையும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் விசாரித்து விடுவதால் உண்மை தன்மையை பொறுத்தே அனுமதி வழங்கப்படுகிறது.  அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் யாரும் பொய் சொல்லி இடம்பெற முடிவதில்லை.

இதுதவிர அனுமதி கிடைத்தவர்களுக்கும் நோய் தொற்று எதுவும் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின்பே வெளியூர் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. எனவே, ஏதோ ஒரு காரணத்தை கூறி அனுமதி பாஸ் வாங்கிவிடலாம் என்று விண்ணப்பிப்பவர்கள் பலர் சிக்கி சின்னாபின்னமாகி வருவது தொடர்கதையாகிறது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருவதும் அதிகரித்து வருகிறது. இதையும் மீறி உரிய காரணங்களை கூறி அனுமதி பெறும் சில இளைஞர்கள் பைக்குகளில் லாங் டிரைவ் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : applicants ,drive ,Long Drive , Bikes, Long Drive, Corporation, Corona
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தல்...