×

ஏப்.15க்கு பிறகு செல்ல இணையதளத்தில் முன்பதிவு: வெளியூர் ரயில் டிக்கெட் சில மணிநேரத்தில் தீர்ந்தது: கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அச்சம்

சென்னை: ஏப்.15ம் தேதிக்கு பிறகு ரயிலில் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான டிக்ெகட் முன்பதிவு இணையதளத்தில் நேற்று துவங்கியது. சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டது. ெகாரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவரை முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்திருந்தது. மேலும், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவித்திருந்ததால் அதுவரை டிக்ெகட் முன்பதிவு செய்வதற்கான இணையதளம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து அனைத்து வகையான போக்குவரத்துகளும் இயங்க வாய்ப்பு உள்ளதால் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், பஸ் ஆகியவற்றின் இணையதள முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சில மணி நேரத்திலேயே சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ரயில் முன்பதிவு தொடங்கி உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.எனவே, ரயில்வே நிர்வாகம் வரும் 15ம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை துவங்கியுள்ளது. ஆனால் முன்பதிவு மையங்களில் ஏப்ரல் 15ம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும்’’ என்றார்.

Tags : Website, Reservation, Outdoor Train Ticket, Corona Virus
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...