×

1000, ரேஷன் பொருட்களை வீடுகளில் நேரடியாக வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை ரேஷன் கடைகளில் கேரளாவை போல் கார்டு வரிசை எண் அடிப்படையில் வீடுகளில் நேரடியாக வழங்குமாறு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க நூலகர் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கை ஒட்டி குடும்ப அட்டைக்கு தலா 1000 மற்றும் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்த பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடினால் சமூக விலகலும் கேள்விக்குறியாகிவிடும்.

கேரளாவில்  ரேஷன் அட்டைகளில் உள்ள எண்கள், வரிசை அடிப்படையில் பொருட்களை வீடுகளுக்கு வழங்கியுள்ளனர். எனவே, ரேஷன் பொருட்களையும், நிவாரண தொகையையும் கார்டுகளில் உள்ள வரிசை எண் அடிப்படையில் வீடுகளில் வழங்கினால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். எந்த கார்டுக்கு எப்போது நிவாரணப்பொருள் வழங்கப்படும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் பயனாளர்களுக்கு தெரிவித்து நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

Tags : households ,Case , Corona Relief, 1000, Ration Items, Icort, Inquiry
× RELATED விவசாயி அணைகரை முத்து மரணம் குறித்து...