×

அது மாஸ்க்-ஆ? இல்லை நாப்கினா?வழக்கம்போல அமைச்சர் செல்லூர் ராஜூ ‘கலகல....’

மதுரை: மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாஸ்க்கை, நாப்கின் என அமைச்சர் செல்லூர் ராஜூ மாற்றிக்கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  மதுரை, பொன்மேனியில் உள்ள ரேஷன் கடையில் ரூ.ஆயிரம் ரொக்கம், இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, ‘‘நாள்தோறும் 100  ரேஷன்கார்டுகளுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 7  மணி வரையும் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.   நியாய விலைக்கடைகளில் நாப்கின், சானிடைசர் வைத்துள்ளோம். ரேஷன் கடை  பணியாளர்கள் எல்லோருக்கும் நாப்கின், சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க. கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். திரும்பத் திரும்ப மாஸ்க்கை, நாப்கின் என்று சொல்லி வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து சமாளித்தபடி, ‘‘எந்த  மாவட்டத்திலும் குழப்பம் இல்லாத அளவுக்கு அரசின் நிவாரணத்தொகை  நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது, கடைகளில் சமூக இடைவெளியும்  முறையாக பின்பற்றப்படுகிறது. நிவாரண பொருட்கள், நிவாரணத்தொகை  வாங்காதவர்களுக்கு வாங்கியதாக குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) வந்தால் நடவடிக்கை  எடுக்கப்படும். மக்கள் தங்கு தடையின்றி பொருட்களை காய்கறிகளை வாங்க  மதுரையில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Selur Raju ,Minister ,Kalakala , Mask, Napkina, Minister Selur Raju, Corona
× RELATED கருப்பு ஆடு சிக்கிருச்சா… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலகல