×

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை; உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுத்தாலும் 2 ஆண்டு சிறை: கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு அதிரடி

டெல்லி: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுப்பவர்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் வெளியில் நடமாடுவது என்பது தொடர்கதையாகவே உள்ளது. காவல்துறையினர் பல்வேறு வழியில் முயற்சி செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

பொதுமக்கள் இவ்வாறு வெளியே நடமாடினால் கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறிவிடும் என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் பொதுமக்கள் வெளியே வருவதை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுத்தாலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை பரப்பி விட்டு சாலையில் நடமாடினால் அதற்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

Tags : jail ,breach , Curfew, jail, corona, central government
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை