×

வெளிநாடுகளுக்கு மாஸ்க், வெண்டிலேட்டர், மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி, நிறுவனங்களை வாங்கும் முயற்சி: சீனாவின் நரித்தந்திரம் அம்பலம்

பெய்ஜிங்: உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் கொரோனா வைரஸை ஏற்றுமதி செய்துவிட்டு தற்போது அதன் மூலம் வியாபாரம் செய்து லாபம் ஈட்டும் பணியில் சீன அரசு இறங்கியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீனா கொரோனா பரவலை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மற்ற நாடுகளுக்கு உதவும் வகையில் வியாபாரம் ஈட்ட  சீன இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கொரோனாவல் பேரிழப்பை சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு 15 டன் மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியது.

தற்போது சீனாவில் உள்ள தொழிற்சாலைகளின் முக்கிய குறிக்கோள், கொரோனா தடுப்பிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதுதான்.சீனாவில் உள்ள 60% தொழிற்சாலைகள் தற்போது அதிக அளவில் மாஸ்குகள், வெண்டிலெட்டர்கள், கிளவுஸ், உடலை மூடும் துணிகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 9000 நிறுவனங்கள் மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனேவே வெளிநாட்டிற்கு சீனா பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது. இனி அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா என்று எல்லா நாடுகளும் தங்கள் நாட்டில் உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு சென்றுள்ளது. அதே சமயம், கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் உடைந்து போய் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் நிறுவனங்களை வாங்க சீனா முயன்று கொண்டு வருகிறது.

Tags : China ,buyout companies , Corona, China, Medical Supplies, Mask, Ventilator, Export, Australia
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...