×

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல்

போபால் : மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டு இருந்த மருத்துவ பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக இந்தூர் மாறியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பதிப்புகளில் 4ல் 3 பங்கு இந்தூரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நகரில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தூர் நகரில் உள்ள டட்பதி பாகல் பகுதியில் சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மருத்துவ பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதார பணியாளர்கள், அலறியடித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை செய்ய போன இடத்தில் சுகாதார பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : attack ,indore , Central, Territory, Corona, Experiment, Mystery, Education, Medical Personnel, Attack
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...