×

கொடைக்கானல் மலையில் பயங்கர காட்டுத்தீ

* பல ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்
* தீயை அணைக்க வனத்துறை போராட்டம்

கொடைக்கானல்:  கொடைக்கானல் மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள், செடிகள் எரிந்து நாசமாகின.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் கடுமையாக இருக்கிறது. வனப்பகுதியில் புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து சருகுகளாக காட்சியளிக்கின்றன. இதனால் காட்டுத்தீ பரவலை தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் கீழ்மலையான தாணிப்பாறை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பட்டா காடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.
இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் மேல்மலையான பெருமாள்மலை அருகே வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் பல ஏக்கர் பரப்பளவில் செடிகள், அரிய வமரங்கள் எரிந்து சாம்பலாகின. வனவிலங்குள் சில பலியாகியும், பல இடம்பெயர்ந்தும் சென்று விட்டன. வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

 இதேபோல் கொடைக்கானல் - வத்தலக்குண்டு வழித்தடமான மச்சூர் பகுதியில் சாலை வரைக்கும் காட்டுத்தீ பற்றி எரிந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இங்கு வனத்துறையினருடன் தீயணைப்புத்துறையும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயால் கொடைக்கானல் நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



Tags : mountain ,Kodaikanal ,Terrible , Terrible, wildfire ,Kodaikanal mountain
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் சென்ற காரில் திடீர் தீவிபத்து