×

மாமல்லபுரத்தில் 8வது நாளாக வெறிச்சோடிய சாலைகள்

மாமல்லபுரம்: மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா நகரமான மாமல்லபுரம் 8வது நாளாக மக்கள் நடமாட்டமின்றி, போக்குவரத்து இல்லாமல்  சாலைகள் வெறிச்சோடி உள்ளன. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள  முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

பல்லவர் கால சிற்பங்கள் உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் நடமாட்டமின்றி அமைதியாக உள்ளது. மேலும், நகருக்குள் எந்த வாகனமும் வராமல் இருக்க சாலைகள் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், மாமல்லபுரம் தீயணைப்பு துறையும் இணைந்து புராதன சின்னங்கள் மீது கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.Tags : roads ,Mamallapuram ,8th Day , 8th day of the, roads ,Mamallapuram
× RELATED அருந்தமிழ்குன்றம் அவலக்குன்றம் ஆனது:...