×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் நிதி

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக திமுக எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பொதுமக்களுக்கு, தமிழக அரசு சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக, வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க ₹10 லட்சத்து 12 ஆயிரம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் மற்றும் அதை நிறுவுதல் பணிக்கு ₹10.40 லட்சம் என மொத்தம் ₹20.52 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை கலெக்டர் பொன்னையாவிடம் சுந்தர் எம்எல்ஏ அளித்தார். கொரோனா வைரஸ் தாக்குதலால், நாடு முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், நோய் தடுப்பு சிகிச்சை உபகரணங்கள் மற்றும் அரசு எடுக்கும் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக, மருத்துவப் பொருட்கள் வாங்க ₹20 லட்சம்.

செங்கல்பட்டு மாவட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு ₹30 லட்சம் என மொத்தம் ₹50 நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம் எம்பி செல்வம் வழங்கினார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனோ  சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனோ பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹25 லட்சத்தை கலெக்டர் ஜான்லூயிசிடம் வழங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான கடிதத்தை கலெக்டரிடம் வழங்கினார்.

Tags : MPs ,DMK , DMK MPs,MLAs, fund coronation, prevention
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...