×

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மாநகர போலீசாருக்கு கபசுர குடிநீர்: கமிஷனர் வழங்கினார்

சென்னை:  கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ேநற்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த ேநாய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை கடந்த 8 நாட்களாக சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று போலீசார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார்  கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையிலும், நோய் எதிர்ப்பு சத்தி அளிக்க கூடிய வகையிலும் சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் அனைத்து போலீசாருக்கும் கபசுர குடிநீர்  சூரணம் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த கமிஷனர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைத்து போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார். இந்த திட்டத்தை மாநகரம் முழுவதும் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை கமிஷனர்கள் நேற்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளனர். நிகழ்ச்சியின்போது சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்  ஜெயராம், தலைமையிட இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Corona ,mosquitoes , Municipal police , protect mosquitoes, corona infection
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...