×

பிரதமரின் நிவாரண நிதிக்கு 60 கோடி: எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வழங்கினர்

சென்னை: பிரதமரின் நிவாரண நிதிக்கு 60 கோடியை எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வழங்கியுள்ளதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவன தமிழகம், புதுச்சேரி ஆயில் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா வைரசை தடுக்க அரசுக்கு உதவும் வகையில், எண்ணெய் நிறுவன ஊழியர்கள் தங்களது இரண்டு நாள் சம்பளத்தை, அதாவது 60 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

மேலும், எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் நிரப்பும் கிடங்கு, காஸ் நிரப்பும் இடம் என அனைத்து இடங்களிலும் இருந்து காஸ் சிலிண்டர் வாகன, எண்ணெய் வாகன டிரைவர்களுக்கு வழியில் எங்கும் உணவு கிடைக்காது என்பதால், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் பணம் கொடுப்பதால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்பதால், டிஜிட்டல் வழி பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். எல்.பி.ஜி உதவி எண் 1906 எப்போதும் செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags : Relief Fund: Oil Company Employees ,Oil Company Employees , Prime Minister, Relief Fund, Oil Company Employees, Corona
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...