கொரோனா பாதிப்பு: ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் மரணம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸ் பாதி த்து சிகிச்சை பெற்று வந்த ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பேட்மேன் பிகயின்ஸ், ஸ்டார்ஸ் வார்ஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரூ ஜேக். பல ஹாலிவுட் படங்களில் வசன உச்சரிப்பு பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் தாக்கியதில் அவர் உடல் நலம் குன்றினார். இதையடுத்து இங்கிலாந்தில் செர்ட்ஸே நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

Related Stories:

>