×

கோடைக்கு முன்பே கோரத்தாண்டவம் 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது: மதுரையில் 102 டிகிரி வெயில் வறுத்தெடுத்தது

சென்னை: தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடைக்கு முன்போ வெயிலின் கோரதாண்டவம் காரணமாக மதுரையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையிலான கால கட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 50 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 64 சதவீதம் குறைவு.  இதற்கிடையே, பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்பது சற்று குறைந்து சமநிலையில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

அது அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சமநிலையில் நீடிக்கும் பட்சத்தில், அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.  இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. சென்னையில் 95 டிகிரி, கோவை, தர்மபுரி, கரூர், சேலம், திருத்தணி(திருவள்ளூர்) ஆகிய இடங்களில் 100 டிகிரி, திருச்சி, வேலூர், மதுரை 98 டிகிரி, பாளையங்கோட்டை 99 டிகிரி, மதுரை 102 டிகிரி வெயில் நிலவியது.  இதேபோல அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெயில் தாக்கம் இருக்கும்.


Tags : districts ,Madurai ,Madura , Gorethandavam, Madurai
× RELATED கூட்டத்திற்கு நடுவே எழுந்துபோனால்...