×

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முதல்வர் எடப்பாடி விழிப்புணர்வு ஆடியோ

சென்னை: `முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன்’’ என தொடங்கும் ஆடியோ தமிழகம் முழுவதும் நேற்று முதல் தொலைபேசியில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆடியோவில் வரும் தகவல் வருமாறு: வணக்கம், உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன். கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. உங்கள் நலனை கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனவே, இந்நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே இருங்கள். நன்றி, வணக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : CM , Corona Virus, CM Edapadi, Audio
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...