×

ஊத்துக்கோட்டை பகுதிகளில் பறிக்க ஆள் வராததால் பூக்கள் உதிர்ந்து வீணாகும் அவலம்: சாலையில் கொட்டப்படும் வெள்ளரிக்காய்

சென்னை: ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதி கிராமங்களில் பூக்களை பறிக்க ஆட்கள் வராததால் உதிர்ந்து கீழே கொட்டும் அவலநிலை உள்ளது. மேலும், வெள்ளரிக்காய்களை சாலையில் கொட்டும் பரிதாபமும் நிலவுகிறது. ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, பெரும்பாலும் விவசாயிகளே அதிகம். இப்பகுதி விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் மல்லி, முல்லை,  சாமந்தி என பல வகையான பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.   விவசாய வேலைக்கு ஆட்கள் வரவில்லை. இதன் காரணமாக,  போந்தவாக்கம் கிராமத்தில் பூத்துக்குலுங்கிய பூக்கள் எல்லாம் உதிர்ந்து போய்விட்டன. மேலும், காக்கவாக்கம் கிராமத்தில் வெள்ளரிகாய்கள் விற்பனையில்லாமல் போய்விட்டதால் கொடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வெள்ளரி பிஞ்சுகளை அறுத்து கிராம சாலையில் கொட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: போந்தவாக்கம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் 150 ஏக்கர் பூ சாகுபடி செய்து வருகிறோம்.  தற்போது, 144 தடை உத்தரவு காரணமாக அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டது.

எங்கள் கிராமம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இதனால், போந்தவாக்கம் கிராம விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள்  நிலத்தில் பயிரிடப்பட்ட செடியில் இருந்து பூக்கள்  பறிக்கப்படாததால் கீழே கொட்டி விடுகிறது. அதனால், ஒவ்வொரு விவசாயியும்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கிராம மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்aதரவால் வீட்டிலேயே முடங்கி உள்ளோம்.  இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், காக்கவாக்கம் கிராமத்தில் வெள்ளரி காய்களை வாங்க ஆட்கள் இல்லாததால், அதை அறுத்து கிராம சாலையில் கொட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளான எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினர்.

Tags : areas ,Uththottai ,road ,calamity , Inflorescence, flowers, corona
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்