×

விளையாட்டு துளிகள்

c தொடர் முக்கியமானது...
என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏதுமில்லை. இப்போதைய சூழலில் போட்டிகளை நடத்த முடியாவிட்டாலும், ஆண்டு இறுதியில் நடத்த வாய்ப்பு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம். ஐபிஎல் ஏதாவது ஒரு வரையில் இந்த ஆண்டு நடத்தப்படும் என்று நினைக்கிறேன். அது சுருக்க வடிவமாகவும் இருக்கலாம். கிரிக்கெட்டில்  ஐபிஎல் தொடர் மிக முக்கியமானது. இந்தியர்களுக்கு மட்டுமல்ல... உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த தொடர் பிடித்தமானது.

போட்டியை நடத்தாமல் இருப்பதை விட, இந்திய வீரர்களை மட்டும் கொண்டு நடத்தலாம் என்பதுதான் எனது கருத்து. உலகில் உள்ள சிறந்த வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஐபிஎல் முக்கியமானது.  அதுமட்டுமல்ல அணி உரிமையாளர்களுக்கு, ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு என பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தொடரை நடத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.- ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளர் மனோஜ் பதாலே

முரளி விஜய் 36
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் முரளி விஜய் நேற்று தனது 36வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு சக வீரர்கள், பிரபலங்கள், ஐசிசி மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆஹா... ஆர்ச்சர்!
இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜோர்பா ஆர்ச்சர் நேற்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2019 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவரும், பைனலில் மிக முக்கியமான சூப்பர் ஓவரை வீசியவருமான ஆர்ச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளது.

Tags : IPL , IPL series, important
× RELATED இணையதள விளையாட்டோடு ஆன்லைன் வகுப்பு...