×

கொரோனா வைரசை தடுக்க பூஜை அறையில் கோதுமை மாவில் மஞ்சள் கலந்து நெய் விளக்கேற்றிய பெண்கள்: வாட்ஸ்அப் பரவலால் பரபரப்பு

திருவள்ளூர்: கொரோனா வைரசை தடுக்க, வாட்ஸ் அப் தகவலால், பெண்கள், தங்களது வீடுகளில் பூஜை அறையில் கோதுமை மாவில் மஞ்சள் கலந்து, நெய் விளக்கேற்றி வழிபட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து பெண்களும் தங்களது வீட்டில் உள்ள பூஜை அறையில், கோதுமை மாவில் மஞ்சள் தூள் சேர்த்து, நெய் அல்லது எண்ணெயால் பிசைந்து, வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளக்கு செய்து, நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதை காஞ்சி பெரியவர் கூறியுள்ளார்’ என வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது.

இத்தகவல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவியதால் ஏராளமான பெண்கள் வீட்டு பூஜை அறையில் இந்த விளக்குகளை ஏற்றி வைத்தனர். இந்த தகவலை, வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் செல்போன் மூலம் பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஏற்றி வைக்கப்படும் விளக்குகள் குளிர்ந்ததும், அதை நீர் நிலைகளில் போட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் கலர் புடவை, தாலி கயிறு மாற்றுதல், தங்கைகளுக்கு சீர் வரிசை, தெருக்களில் விளக்கேற்றுதல் என தகவல்கள் பரவுவது வாடிக்கையாக உள்ளது.

Tags : pooja room ,WhatsApp Women Who Sprinkle Turmeric , Corona, Women of Lighting, WhatsApp
× RELATED பெண்கள் மீதான வன்முறைகளை...