×

ராஜஸ்தானை சேர்ந்த 50 பேர் நாகையில் உணவின்றி தவிப்பு: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அமைச்சரிடம் கோரிக்கை

நாகை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 50 பேர் நாகை ஆரியநாட்டுத்தெருவில் தங்கியுள்ளனர். இவர்கள் நாகையில் பல்வேறு பகுதிகளில் கரும்பு ஜீஸ், ஐஸ், குல்பிஐஸ், பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலை இழந்து, உணவுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த 50 பேரும் நேற்று, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சந்தித்து தங்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

உடனே அமைச்சர் சொந்த மாநிலத்துக்கு தற்பொழுது அனுப்பி வைப்பது என்பது முடியாத காரியம். நாகையில் ஒரு இடத்தை பிடித்து அங்கேயே தங்க வைத்து இலவசமாக உணவு, உடை வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதன்பின் கலெக்டர் பிரவின் பி நாயரை அழைத்து அதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்யும்படி உத்தரவிட்டார்.

Tags : Rajasthan ,death ,minister ,Naga , Rajasthan, Naga, starving without food
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை