×

தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணையதளம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சிறப்பு இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வர கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் கொரோனா குறித்த நிலவரங்களை தெரிந்துகொள்ள www.stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதில், கொரோனா குறித்த அரசின் அறிவிக்கைகள், அரசின் முக்கிய அறிவிப்புகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுளோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை என கொரோனா குறித்த அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள் சார்ந்த புகைப்படங்கள் அனைத்தும் அதில் கிடைக்கிறது.

Tags : Corona ,Tamil Nadu , Tamilnadu, Corona, Public, Tamilnadu Government, Special Website
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...