×

சீனாவில் கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்தது: நேற்று புதிதாக யாருக்கும் தொற்றோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தகவல்

பெய்ஜிங்: சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் 8,71,985பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 43, 261 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டில்  வைரசின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதேபோல், கொரோனா தொடர்பான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சீனாவின் வுகான் நகரில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் முறையாக அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட முடிவுகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தால், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் அங்கும் பரிசோதிக்கப்படும் என கூறப்படுகிறது.


Tags : China ,Corona ,newborns ,death ,nobody , China, Corona
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்