×

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் ஆட்சியர் உயிர் தப்பினார்.இன்று காலை ஆட்சியர் மதுசூதனன் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ய இன்று காலை சிவகங்கையிலிருந்து புறப்பட்டு காளையார்கோவில் வழியாக அவர் சென்றுள்ளார்.அப்போது காளகண்வாய் என்ற இடத்தில் சென்ற போது எதிரே சைக்கிளில் ஒரு சிறுவன் குறுக்காக செல்ல முயன்ற போது அதனை கண்ட கார் ஓட்டுநர் எதிர்பாராதவிதாக பிரேக்கை அதிகமாக அழுத்தியுள்ளார். இதனால் முன்பக்க டயர் வெடித்து அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வண்டி மோதி தலைக்குப்புற கவிழ்த்துள்ளது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆட்சியரை காப்பாற்றியுள்ளனர். ஆட்சியர் ஷீட் பெல்ட் போட்டுகொண்டு பயணித்துள்ளார். இதனால் ஏர் பேக் திறந்து காப்பாற்றியுள்ளது….

The post சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Sivaganga District ,Collector ,Madhusudhanan ,Sivagangai ,Sivagangai District ,Madhusudhana Reddy ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் பலத்த மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு